16-ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

16-ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
Updated on

தமிழகத்தில் வரும் 16-ம் தேதி வரை கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் தெரிவித்ததாவது;

வங்கக்கடலில் உருவான அசானி புயல் நேற்று ஆந்திரா மாநிலம் மசூலிப்பட்டினம் அருகே கரையைக் கடந்தது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் கனமழைக்கு வாய்ப்புண்டு.. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மே 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யும். 

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசும் எனவே, மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

-இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com