இன்று அட்சய திருதியை: நகைக் கடைகளில் மக்கள் கூட்டம்!

இன்று அட்சய திருதியை: நகைக் கடைகளில் மக்கள் கூட்டம்!
Published on

இன்று அட்சய திருதியை தினம் ஆகும். இந்த நாளில் தங்கம் வாங்கினால் மேன்மேலும் வளரும் என்பது நம்பிக்கை ஆதலால், நகைக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. 

அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு ஏராளமான நகைக்கடைகள் மக்களை கவரும் வகையில் பல சலுகைகள் அறிவித்துள்ளன. இன்று வாங்கும் நகைகளுக்கு செய்கூலி, சேதாரம் இல்லை, கற்களுக்கு விலை இல்லை என்பது உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அறிவிக்கப் பட்டுள்ளன.மேலும் தமிழகத்தில் பல நகைக் கடைகளில் முன்பதிவு வசதியையும் ஏற்படுத்தியிருந்தன. 

இதுகுறித்து சென்னை நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்ததாவது;

இந்த ஆண்டு அட்சய திருதியை முகூர்த்த நேரமாக இன்று காலை 5.49 மணி முதல் பகல் 12.13 வரை குறிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நேரத்தில் அதிகம்பேர் நகைக் கடைகளுக்கு வருவார்கள்  என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக பலர், நேற்றே நகை கடைகளுக்கு வந்திருந்து நகையை தேர்வு செய்து விட்டு சென்றனர். இதனால் அட்சய தினத்துக்கு முன்பாகவே கடந்த சில தினங்களாக நகைக்கடைகளில் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

மேலும் இன்று தியாகராய நகர், புரசைவாக்கம், அண்ணாசாலை உள்பட சென்னையில் பல்வேறு நகைக்கடைகள் அதிகாலை 5.30 மணிக்கே திறக்கப்பட்டுள்ளன. இன்றைய சிறப்பு தினத்தை முன்னிட்டு இவற்றில் நள்ளிரவு வரை விற்பனை நடைபெறும். மக்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர். எனவே தங்கத்தின் விலை அதிகரித்திருந்தாலும் விற்பனை நன்றாகவே இருக்கிறது.

-இவ்வாறு நகை வியாபாரிகள் தெரிவித்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com