காஷ்மீரில் இந்துக்கள் படுகொலை: அமித் ஷா தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம்!

காஷ்மீரில் இந்துக்கள் படுகொலை: அமித் ஷா தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம்!

ஜம்மு காஷ்மீரில் பன்டிட்கள் மற்றும் இந்துக்களை குறிவைத்து  நடத்தப்படும் படுகொலைகள் மற்றும் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் குறித்து விவாதிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தலைமையில் இன்று உயர்மட்ட அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பண்டிட்டுகளையும் இந்துக்களையும் தீவிரவாதிகள் தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். கடந்த மே 1-ம் தேதி காஷ்மீரில் 8 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்… அவர்களில் 3 பேர் போலீசார் மற்றும் 5 பேர் பொதுமக்கள் ஆவர். கடந்த மே 12- ல் புத்காம் மாவட்டத்தின் தாசில்தார் அலுவலகத்தில் ராகுல் பட் என்ற எழுத்தர் சுட்டுக் கொல்லப்பட்டார்… 3 நாட்களுக்கு முன்பு, குல்காம் மாவட்டத்தின் கோபால்போராவில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். காஷ்மீரின் எலாக்கி தேஹாட்டி வங்கியின் மேலாளராக இருந்த விஜய்குமார் என்பவரை நேற்று பயங்கரவாதிகள் சுட்டு கொலை செய்தனர். இப்படி தொடர் படுகொலைகளுக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் நேற்றைய தினம் ஆலோசனையில் ஈடுபட்டார்… எனினும் இது வழக்கமான ஒரு ஆலோசனைக் கூட்டம் என்றே சொல்லப்பட்டாலும், காஷ்மீர் விவகாரம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது.. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமை குறித்து விவாதிக்க இன்று அதாவது ஜுன் 3-ம் தேதி உயர்மட்டக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் முக்கியமுடிவுகள் எடுக்கபடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com