உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி; வெள்ளி வென்றார் இந்தியாவில் ஸ்வப்னில் குசலே!

உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி; வெள்ளி வென்றார் இந்தியாவில் ஸ்வப்னில் குசலே!

Published on

அஜர்பைஜா நாட்டின் பாகு நகரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் ஸ்வப்னில் குசலே, வெள்ளிப் பதக்கம் வென்றார்.

அசர்பைஜான் நாட்டில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசஷின் பிரிவின் இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் ஸ்வப்னில் குசலே  ரியோ தகுதி பெற்றார்.

இதையடுத்து ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற உக்ரைனின் செர்ஹி குலிஷை இந்த இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஸ்வப்னில்  எதிர்கொண்டார். இதில் ஸ்வன்னில் குசலே 10-16 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஸ்வப்னில் குசலே பதக்கம் வெல்வது இதுவே முதன் முறையாகும். இந்தத் தொடரில் இந்தியாவில் இருந்து 12 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை ஒரு தங்கம், ஒரு வெள்ளி வென்றுள்ள இந்தியா பதக்கப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com