இலங்கையில் நிலவும் அரசியல் குழப்பம்; 26 அமைச்சர்கள் பதவி ராஜினாமா!

இலங்கையில் நிலவும் அரசியல் குழப்பம்; 26 அமைச்சர்கள் பதவி ராஜினாமா!
Published on

இலங்கையில் பொருளாதார நிதி நெருக்கடி மிக மோசமாக அதிகரித்த நிலையில், 26 அமைச்சர்கள் தம் பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து அங்கு பெரும் அரசியல் குழப்பம் நிலவுவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. 26 அமைச்சர்களின் ராஜினாமாவை ஏற்ற அந்நாட்டின் அதிபர் கோட்டாபய ராஜபக்சேவை பிரதமர் மகிந்த ராஜபக்சே  சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இலங்கையிலிருந்து வெளியான அரசியல் விமரிசகர்கல் மற்றும் பொதுமக்களீன் கருத்துக்களில் தெரிவிக்கப்பட்டதாவது:

இலங்கையில் இப்போது ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியே இப்போதைய அரசியல் குழப்பத்திற்கு காரணமாகியுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக முடங்கிப் போன சுற்றுலாத்துறை, இயற்கை விவசாயத்தை வலியுறுத்தியதால் வேளாண் துறையில் விளைச்சல் வெகுவாக குறைந்தது போன்றவற்றால் இலங்கை பொருளாதாரம் மிக மோசமான நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.

வரலாறு காணாத அளவுக்கு விலைவாசி எகிறியுள்ளது. தினசரி 10 மணிநேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இலங்கை மக்கள் போராட்டத்தில் இறங்கி, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போராட்டத்தைத் தடுக்க அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள இதனால் இலங்கையில் மிகப் பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்றிரவு இலங்கை அமைச்சர்கள் தம் பதவிகளை ராஜினாமா செய்ய,  அதிபர் கோட்டாபய ராஜபக்சே அந்த ராஜினாமாக்களை ஏற்றுக் கொண்டார்.

-இவ்வாறு தெரிவித்தனர். இந்நிலையில், பொருளாதார நிதி நெருக்கடியைச் சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் கொண்ட ஒரு அரசை அமைக்க அதிபர் கோட்டாபய ராஜபக்சே அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com