பேரறிவாளன் விடுதலை: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

பேரறிவாளன் விடுதலை: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

Published on

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரில் ஒருவரான பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக உச்சநீதிமன்றம் இன்று விசாரணை நடத்தியது.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதில் பேரறிவாளன் தன்னை இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் வழக்கு முடியும்வரை தனக்கு ஜாமீன் கோரியதையடுத்து, அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. 

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 7 தமிழர் விடுதலை விவகாரத்தில் தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை ஆளுநர் கிடப்பில் போட்டதை கடுமையாக விமர்சித்தது. மேலும் பேரறிவாளனை வழக்கில் இருந்து விடுதலை செய்யலாம் என்பதே தங்களது நிலைப்பாடு என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தனர். ஆனால் இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து இந்த வழக்கில் இன்று மீண்டும் விசாரணை நடைபெறுகிறது. இன்றைய விசாரணையின் போது பேரறிவாளனை விடுதலை செய்யும் உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது…

பேரறிவாளன் விடுதலை குறித்த விசாரணையில் இன்று உச்ச நீதிமன்றத்தில் உத்தரவிட்டதாவது:

பேரறிவாளன் விடுதலை குறித்து மே 10-ம் தேதிக்குள் மத்திய அரசு முடிவெடுக்காவிட்டால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி உச்ச நீதிமன்றமே முடிவெடுக்கும்.

_ இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com