காரைக்காலில் காலரா: 2 பேர் பலி!

காரைக்காலில் காலரா: 2 பேர் பலி!

புதுச்சேரியிலுள்ள காரைக்காலில் காலரா நோய் தொற்று ஏற்பட்டதையடுத்து, அங்கு 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு காலராவால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் உயிரிழந்து விட்டதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

-இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்ததாவது:

காரைக்கால் மாவட்டத்தில் 700-க்கும் மேற்பட்டோருக்கு திடீரென வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதையடுத்து ஜூலை 2-ம் தேதி முதல், பொது சுகாதார அவசர நிலை அறிவிக்கப் பட்டது.

மக்கள் குடிநீரை காய்ச்சி வடிகட்டி அருந்த வேண்டும், சூடான உணவை மட்டுமே சாப்பிட வேண்டும், திறந்தவெளியில் இயற்கை உபாதை கழிப்பது கூடாது, உடல்நிலை பாதிக்கப்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர். இந்நிலையில் காரைக்காலில் வாந்தி, வயிற்றுப் போக்கால் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப் பட்டது கன்டறியப் பட்டுள்ளது.

அதில் சுமார் 700 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் காலராவால் பாதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்தனர். 

-இவ்வாறு புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

இதனிடையே அங்கு காலரா நோய் ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டறிய மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com