விநாயகர் கோவில் தெரு; நியூயார்க் நகரத் தெருவொன்றின் புதிய பெயர் அறிமுகம்!

விநாயகர் கோவில் தெரு; நியூயார்க் நகரத் தெருவொன்றின் புதிய பெயர் அறிமுகம்!
Published on

அமெரிக்காவின் நியூயார்க்கில் ஒரு தெருவுக்கு  நகர தெருவுக்கு 'விநாயகர் கோவில் தெரு'  என்ற புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவுக்கான இந்திய துணை தூதர் ரந்திர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மகா வல்லப கணபதி தேவஸ்தான கோவில் 1977-ம் ஆண்டு நிறுவப்பட்டு, வட அமெரிக்காவின் பழமையான இந்து கோவில் என்ற பெருமையை பெற்றுள்ளது.

குயின்ஸ் கவுண்டிக்கு உட்பட்ட பிளஷிங்கில் இந்த கோவில் அமைந்துள்ள தெருவுக்கு இதுவரை 'போவின் தெரு' என பெயர் இருந்தது. அமெரிக்காவின் அடிமைத்தன எதிர்ப்புக்குப் போராடிய ஜான் போவின் நினைவாக இந்த பெயர் சூட்டப்பட்டு இருந்தது.

தற்போது இங்கு இந்த விநாயகர் கோவில் பிரபலமாக விளங்குவதால் இத்தெருவின் பெயர் 'விநாயகர் கோவில் தெரு' என இணை பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

-இவ்வாறு அவர் கூறினார்..

கடந்த 2-ம் தேதி நடந்த இந்த பெயர் சூட்டு நிகழ்ச்சியில் அமெரிக்காவுக்கான இந்திய துணை தூதர் ரந்திர் ஜெய்ஸ்வால், மற்றும் நியூயார்க் மேயர் அலுவலக அதிகாரி எரிக் ஆடம்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com