ஜெய் பீம்: நடிகர் சூர்யா மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு!

ஜெய் பீம்: நடிகர் சூர்யா மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

நடிகர் சூர்யா நடித்து வெளியான ஜெய் பீம் திரைப்படம் பெரும் வெற்றி கண்டது. இந்த படத்தை தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் அட நிறுவனம் சார்பில் சூர்யாவும் அவரது மனைவி ஜோதிகாவும் இணைந்து தயாரித்திருந்தனர்.

உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் .செ.ஞானவேல் இயக்கிய 'ஜெய் பீம்' திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் பல விருதுகளையும் குவித்து வருகிறது. இந்தநிலையில், இந்த திரைப்படத்தில் வன்னியர்களை இழிவுப்படுத்தும் வகையில் சில காட்சிகள் இருப்பதாக பாமக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

மேலும் வன்னியர் சங்கத்தின் குறியீடான அக்னி குண்டத்தையும் காடுவெட்டி குருவை தவறாக சித்தரித்து இருப்பதாகவும் குறிப்பிட்டு, ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் நிறுவன தலைவர் சந்தோஷ் நாயகர் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதையடுத்து ஜெய்பீம் படத்தின் தயாரிப்பாளர்கள் சூர்யாற்றும் ஜோதிகா, இயக்குநர் த.செ.ஞானவேல் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு சைதாப்பேட்டை நீதிமன்றம் போலீசுக்கு உத்தரவிட்டுள்ளது. 

logo
Kalki Online
kalkionline.com