ரஷ்யா அணுஆயுதப் போர் பயிற்சி: சர்வதேச நாடுகள் பதற்றம்!

ரஷ்யா அணுஆயுதப் போர் பயிற்சி: சர்வதேச நாடுகள் பதற்றம்!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில்,ரஷ்யா திடீரென் அணு ஆயுத ஏவுகணைகல் மூலம் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் பால்டிக் கடற்பகுதியில் நேற்று முதல் அணு ஆயுத ஏவுகணைகளை கொண்டு ரஷ்யா முன்னோட்ட போர் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இதனால் உக்ரைன் மீது விரைவில் ரஷ்யா அணு ஆயுத தாக்குதல் நடத்தக்கூடும் என்று தகவல்கல் வெளியாயின., இந்த செய்திகளுக்கு ரஷ்யா இதுவரை எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைனில் ரஷ்ய மொழி பேசும் சிறுபான்மையினர் இனப்படுகொலை செய்யப்படுவதாக கூறி அந்நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. சுமார் 70 நாட்களாக நடைபெற்று வரும் போரால் உக்ரைனின் பல நகரங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. பலர் உயிரிழந்தனர்.

 ரஷ்ய ராணுவத் தரப்பிலும் அதிக அளவில் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. போர் நிறுத்தம் தொடர்பாக இருதரப்புக்கு இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தைகளில் சுமூக முடிவு ஏதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com