சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சனவிழா உற்சவம் ஜூன் 25-ம் தேதி தொடங்கி, தினமும் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். நேற்று தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதியுலா நடந்தது. இந்நிலையில் ஆனி திருமஞ்சன விழாவின் பிரதான நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
–இதுகுறித்து சிதம்பரம் ஶ்ரீநடராஜர் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்ததாவது:
சிதம்பரம் ஆனித் திருமஞ்சன விழாவின் முக்கிய அம்சமான இந்த தேரோட்டத்தில் ஶ்ரீநடராஜர் – சிவகாமசுந்தரி, அம்பாள்,, மற்றும் உற்சவமூர்த்திகளாக விநாயகர், சுப்பிரமணியர் , சண்டிகேஸ்வரர் ஆகியோர் வீதி உலா வந்து அருள் பாலித்தனர். இன்று மாலை 3 மணிக்கு ஆனி திருமஞ்சன தரிசனம் நடைபெறவுள்ளது. வருகிற 7-ம் தேதி பஞ்சமூர்த்தி முத்து பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் முடிவடைகிறது. உற்சவம் ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர். தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் வடக்கு மற்றும் மேற்கு கோபுர வாயில் வழியாக கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர்.
-இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.