TNEA பொறியியல் மாணவர் சேர்க்கை; புதிய நடைமுறை அமல்! 

TNEA பொறியியல் மாணவர் சேர்க்கை; புதிய நடைமுறை அமல்! 
Published on

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கையில் மாணவர்களின்  கலந்தாய்வுநான்கு சுற்றுகளில் நடைபெறும் என்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை உறுதி செய்ய பல்வேறு வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும்தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை செயலாளா் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து புருஷோத்தமன் தெரிவித்ததாவது: 

இந்த கல்வியாண்டிற்கான பொறியியல் படிப்புகளுக்கு 1 லட்சத்து 49 ஆயிரத்து 369 விண்ணப்பங்கள் வந்து அவற்றின் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளது 

கடந்த வருடங்களில் கலந்தாய்வின் மூலம் ஒதுக்கீட்டைப் பெற்ற மாணவர்கள்,பின்னர் அதனை நிராகரித்து விடுவதால் காலியிடங்கள் ஏற்படுகின்றன. இப்பிரச்சினையைப் போக்கும் வகையில் இந்த வருடம் பல்வேறு புதிய நடைமுறைகள் அமல்படுத்தப் பட்டுள்ளன. 

அதன்படி,ஒதுக்கப்பட்ட கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகள் திருப்திகரமாக இருந்தால்,7 நாட்களுக்குள் ஒதுக்கப்பட்ட கல்லூரியில் சேர வேண்டும். மேலும், இந்த குறிப்பிட்டகல்லூரியில் சேராத (அல்லது) கல்லூரியில் உரிய கட்டணத்தை செலுத்தாத மாணாக்கர்களின் ஒதுக்கீடு ஆணை ரத்து செய்யப்படும். 

மேலும், அந்த மாணாக்கர்கள் அடுத்த கலந்தாய்வு சுற்றுகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதேபோன்று, ஒதுக்கப்பட்ட கல்லூரி மற்றும் பாடப்பிரிவில் திருப்தி அடையாத மாணாக்கர்கள்,மேல் நோக்கிய நகர்தலுக்காக (Upward Movement) காத்திருக்கலாம் (அல்லது) கலந்தாய்வில் இருந்து வெளியேறலாம் 

மேலும் குறிப்பிட்டநாட்களுக்குள் கல்லூரியில் சேராத அல்லது கல்லூரியில் உரிய கட்டணத்தை செலுத்தாத மாணாக்கர்களின் ஒதுக்கீடு ஆணை ரத்து செய்யப்படும்.அந்த இடங்கள் காலியாக காட்டப்பட்டு தரவரிசையில் பின்னணியில் இருக்கும் மாணவர்கள் அந்த இடங்களில் சேர்க்கப் படுவார்கள். 

இவ்வாறு தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை செயலாளா் புருஷோத்தமன் தெரிவித்தார் 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com