நாட்டின் 75-ம் ஆண்டு சுதந்திர தின விழா இம்மாதம் 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த 75வது ஆண்டு சுதந்திர தினத்தை சிறப்பாக ஒரு ஆண்டு வரை கொண்டாடும் வகையில் மத்திய அரசு சிறப்பு அறிவிப்பு செய்துள்ளது.
அதன்படி 'ஆஸாதி கா அம்ருத் மஹோத்ஸவ்' எனும் பெயரில் இந்த கொண்டாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, 75-வது சுதந்திர தினத்தையொட்டி மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், 75-வது சுதந்திர தினத்தையொட்டி அருங்காட்சியகங்கள், நினைவுச் சின்னங்களை இலவசமாக பார்வையிட அனுமதி அளித்து மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று ஆகஸ்ட் 5 முதல் 15-ம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியகங்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள், தொல்லியல் தளங்கள் உள்ளிட்டவற்றை மக்கள் இலவசமாக பார்வையிடலாம். மேலும் முக்கிய சுற்றுலா தலங்களுக்கும் கட்டணம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.