School first வந்தால் ஹெலிகாப்டர் சவாரி; சத்தீஸ்கர் முதல்வர் அறிவிப்பு!

School first வந்தால் ஹெலிகாப்டர் சவாரி; சத்தீஸ்கர் முதல்வர் அறிவிப்பு!

சத்தீஸ்கர் மாநிலத்தில் இப்போது 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவிகளுக்கு ஹெலிகாப்டர் சவாரியை சிறப்பு பரிசாக அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகல் அறிவித்துள்ளார்.

தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 420 கி.மீ. தொலைவில் உள்ள பலராம்பூரில் தனது தொகுதி மக்களை சந்தித்தபின், முதல்வர் பூபேஷ் பாகல் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

சத்தீஸ்கரில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளிகள் அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்கள் சிறப்புப் பரிசாக ஹெலிகாப்டரில் சவாரி அழைத்துச் செல்லப்படுவர். குழந்தைகளுக்கு உத்வேகம் அளிக்கவும், ஊக்குவிக்கவும் இந்த திட்டத்தை அறிமுகப் படுத்துகிறோம். குழந்தைகள் இதன்மூலம் ஊக்கமடைந்து தம் லட்சியத்தை அடைவதற்காக தங்கள் திறமைகளை மேலும் வளர்த்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

-இவ்வாறு அவர் குறிப்பிட்டார். 

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com