NLC-யில் கேட் தேர்வு மூலம் பணிநியமனம் கூடாது: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

NLC-யில் கேட் தேர்வு மூலம் பணிநியமனம் கூடாது: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
Published on

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்.எல்.சி) 'கேட்' தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணியாட்களை தேர்வு செய்யும் முடிவை மத்திய அரசு நீக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு..ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டதாவது;

என்.எல்.சி நிறுவனத்தில் பணியாற்ற பணியாளர்களை தேர்வு செய்யும் போது, இந்த சுரங்கம் அமைப்பதற்காக  முன்பு தங்கள் நிலங்களை வழங்கியோர் குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில்  இந்நிறுவனத்தில் இனி , பட்டதாரி நிர்வாகப் பயிற்சியாளர் பணிக்கு கேட்' (GATE) தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே பணி நியமனம் செய்யப்படுவார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்த அறிவிப்பு கேட் தேர்வை எழுதாத உள்ளூர் மக்களை பெரிதும் பாதிக்கும்.

எனவே, இந்நிறுவனத்தில் 'கேட்' மதிப்பெண்கள் அடிப்படையில் பணியாளர்களை தேர்வு செய்யும் முடிவை மாற்ற வேண்டும். அதற்கு பதிலாக என்எல்சி நிறுவனமே தகுதித் தேர்வை நடத்தி பணியாளர்களை நியமிக்க வகைசெய்ய வேண்டும். 

-இவ்வாறு மு.. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com