என் காதல் கணவரை என் கண் முன்பே கொன்று விட்டார்கள்: இளம் பெண் கதறல்!

என் காதல் கணவரை என் கண் முன்பே கொன்று விட்டார்கள்: இளம் பெண் கதறல்!

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தைச் சேர்ந்த பில்லாபுரம் நாகராஜ் (25). ஐதராபாத்தில் ஒரு கார் ஷோரூமில் சேல்ஸ்மேனாக பணிபுரிந்தவர். பட்டியல் இனத்தவரான நாகராஜ், அதே பகுதியைச் சேர்ந்த சையது அஷ்ரின் சுல்தானா என்ற முஸ்லிம் பெண்ணை காதலித்து, பெண் வீட்டின் எதிர்ப்பை மீறி கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டார்

இந்த சூழலில், நாகராஜ் நேற்று முன்தினம் இரவு தனது மனைவி சுல்தானாவுடன் மோட்டார் சைக்கிளில் வந்துக் கொண்டிருந்த போது, சுல்தானாவின் சகோதரர் மொபின் அகமது மற்றும் அவரது நண்பர் ஆகியோர் நாகராஜை வெட்டிக் கொலை செய்தனர். கணவரைக் காப்பாற்ற சுல்தானா முயன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் சுல்தானா பேசியதாவது;

என்னை திருமணம் செய்து கொண்டால் அவரது உயிருக்கு என் சகோதரர்களால் ஆபத்து என்று நான் பலமுறை சொல்லியும் ,''வாழ்ந்தாலும், இறந்தாலும் உன்னோடுதான்..'' என்று சொல்லி என்னை திருமணம் செய்துகொண்டார். இப்போது நான் பயந்ததை போலவே நடந்துவிட்டது.

அவரை என் கண் முன்னாலேயே துடிக்க துடிக்கக் கொன்றுவிட்டார்கள். அந்நேரத்தில் அச்சம்பவத்தை 100-க்கும் மேற்பட்டோர் வேடிக்கை பார்த்தனர். ஒருவர் கூட உதவிக்கு வரவில்லை. அப்படி யாராவது உதவ முன்வந்திருந்தால், என் கணவரைக்  காப்பற்றியிருக்கலாம். அவரை கொலை செய்த என் சகோதரர் உள்ளிட்டோருக்கு கடும் தண்டனை கிடைக்க வேண்டும்.

-இவ்வாறு சொல்லி கதறி அழுதார் சுல்தானா.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com