நபிகள் குறித்து சர்ச்சைக் கருத்து; பாஜக நிர்வாகிகள் அதிரடி நீக்கம்!

நபிகள் குறித்து சர்ச்சைக் கருத்து; பாஜக நிர்வாகிகள் அதிரடி நீக்கம்!
Published on

இந்திய தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியொன்றில் பாஜக செய்தித் தொடர்பாளன நுபுர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக் கருத்துகள் தெரிவித்தார். இதையடுத்து மஹாராஷ்டிராவில் நுபுர் சர்மா மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டது. இந்நிலையில் பாஜக ஊடகப் பொறுப்பாளரான நவீன்குமார் ஜிந்தால் சமூக வலைதளத்தில் நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக கருத்து பதிவிட்டு பின்னர் அதனை நீக்கினார். இதுவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் நுபுர் சர்மா மற்றும் நவீன்குமார் ஜிந்தால் ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து பாஜக அதிரடியாக நீக்கியுள்ளது.

நபிகல் நாயகம் குறித்து நுபுர் சர்மா, மற்றும் நவீன்குமார் ஜிந்தாலின் சர்ச்சஇக் கருத்துகளுக்கு சவுதி அரேபியா, கத்தார், குவைத் உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இது தொடர்பாக இந்திய தூதருக்கு கத்தார் அரசு சம்மன் அனுப்பியது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக, நுபுர் சர்மா மற்றும் நவீன்குமார் ஜிந்தாலை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியதாக பாஜக அறிவித்துள்ளது. இதுகுறித்து பாஜக வெலியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டதாவது;

பிஜேபி அனைத்து மதங்களையும் மதிக்கும் கட்சி. இந்நிலையில் இக்கட்சியின் உறுப்பினர்கள் வேறெந்த மதத்தை அவமதிப்பதையும் ஏற்க முடியாது. எனவே நுபுர் சர்மா மற்றும் நவீன் குமாருக்கு எதிராக இந்த நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது.

-இவ்வாறு பாஜக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பிஜேபி-யின் இந்த நடவடிக்கைக்கு பஹ்ரைன், சவுதி உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் பலவும் பாராட்டி வரவேற்றுள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com