மின்வாரிய வேலை அறிவிப்பு ரத்து!

மின்வாரிய வேலை அறிவிப்பு ரத்து!

தமிழ்நாடு மின்வாரியத்தில் வேலைக்கு ஆட்கள் சேர்ப்பதற்கான அறிவிப்பாணை ரத்து செய்யப்பட்டுள்ளது.

– இது குறித்து தமிழக மின்வாரியம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டதாவது:

தமிழக மின்வாரியத்தில் இளநிலை உதவியாளர், உதவி பொறியாளர் உள்பட 5,318 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணைகள் கடந்த 2021-ம்  ஆண்டு வெளியிடப்பட்டன.

இதற்காக தேர்வு நடத்தி காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என அரசு தெரிவித்தது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடக்கவிருந்த தேர்வுகள் கொரோனா, மற்றும் சட்டசபை தேர்தல் காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த தேர்வுகள் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. இதனால் ஏற்கெனவே அறிவிக்கப் பட்ட ஆள் சேர்ப்புக்கான ஆணை  ரத்து செய்யப்பட்டுள்ளது.. கணினி வழித் தேர்வு ரத்து செய்யப்பட்டு கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்.

– இவ்வாறு அறிவிக்கப் பட்டுள்ளது

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com