தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று திடீர் பயணமாக சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.  அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக டெல்லி செல்வதாக ஆளுநர் மாளிகையில் தகவல் தெரிவிக்கப் பட்டாலும் அரசியல் வட்டாரத்டில் பரபரப்பாக உள்ளது.

ஆளுநர் ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் வைத்திருப்பது, மற்றும் கூட்டுறவு சங்க சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட 7 மசோதாக்கள் ஆளுநர் ரவியிடம் நிலுவையில் உள்ளன. இதையடுத்து கடந்த 4-ம் தேதி மக்களவையில் `தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை நீக்க வேண்டும்' என்று திமுக-வினர் கோரிக்கை வைத்தனர்.

மேலும் ஆளுநர் ரவியின் நடவடிக்கை குறித்து விவாதம் நடத்தக் கோரி திமுக எம்.பி டி.ஆர்.பாலு நாடாளுமன்ற சபாநாயகருக்கு வலியுறுத்தினார். ஆனால் சபாநாயகர் ஓம் பிர்லா அந்த கோரிக்கையை ஏற்கவில்லை. இதையடுத்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி நேரத்தின்போது முழக்கங்களை எழுப்பி வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில் ஆளுநர் ரவி, இன்று சென்னையிலிருந்து டெல்லி சென்றுள்ள விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com