இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, பல முண்ணனி நிறுவனங்களில் முதலீடு செய்து வரும் நிலையில் இப்போது சென்னையை சேர்ந்த கருடா ஏரோஸ்பேஸ் என்கிற டிரோன் தயாரிப்பு நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-இதுகுறித்து தோனி தன் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது;
சென்னையைச் சேர்ந்த கருடா ஏரோஸ்பேஸ் என்கிற ஸ்டார்ட் அப் நிறுவனம், ட்ரோன்களை தயாரித்து வருவதுடன் விவசாயத்துறைக்கு தேவையான ட்ரோன் அமைப்புகளை உருவாக்கி வருகிறது. இந்நிலையில், கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தில் கணிசமாக முதலீடு செய்துள்ளேன்.
-இவ்வாறு தோனி தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இந்நிறுவனத்தின் விளம்பரத் தூதராகவும் தோனி நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா முழுவதும் 26 நகரங்களில் இயங்கி வரும் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் உற்பத்தி மையத்தை பிரதமர் மோடி சமீபத்தில் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியாவில் வருங்காலங்களில் ஹெலிகாப்டருக்கு பதிலாக ட்ரோன்கள் அதிக பயன்பாட்டுக்கு வரும் என மோடி தெரிவித்திருந்தார். இந்நிலையில் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தில் தோனி முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.