நடிகர் விக்ரம் மருத்துவமனையில் திடீர் அனுமதி!

நடிகர் விக்ரம் மருத்துவமனையில் திடீர் அனுமதி!
Published on

நடிகர் விக்ரம் தமிழ்த் திரையுலகில் 1990-ம் ஆண்டில் அறிமுகமாகி, சீயான் விக்ரம்  என பிரபலமாகி, பின்னர் தெலுங்கு, மலையாளம் உட்பட படங்களில் நடித்து வருகிறார்.

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது, தேசிய விருது, 6 முறை ஃபிலிம்ஃபேர் விருது உட்பட பல்வேறு விருதுகளை விக்ரம்  வென்றுள்ளார். இந்நிலையில் விக்ரம் உட்பட பலர் நடித்த பொன்னியின் செல்வன் படத்தின்  டீஸர் இன்று மாலை வெளியாக உள்ளது.

இந்நிலையில் நடிகர் விக்ரமுக்கு திடீர்  உடல்நல குறைவு ஏற்பட்டு, சென்னையில் தனியார் வால் மருத்துவமனை ஒன்றில்  சேர்க்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

நடிகர் சீயான் விக்ரமுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும், தற்போது  மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் படுவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com