தனியார் மயம் ஆகிறதா மின்சார வாரியத் துறை?  

தனியார் மயம் ஆகிறதா மின்சார வாரியத் துறை?  
Published on

நாடாளுமன்றத்தில் தற்போது மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று மின்சார சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. 

–இதுகுறித்து மத்திய மின்சாரத் துறை அமைச்சகம் சார்பாக தெரிவிக்கப் பட்டதாவது; 

நாடாளுமன்றத்தில் இன்று மின்சார சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மின்சார சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் மின்துறை அமைச்சர் ஆர்கே சிங் தாக்கல் செய்யவுள்ளார்.

மின் விநியோகத்தை தனியாருக்கு விடுவது, மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது உள்ளிட்டவை அடங்கிய புதிய சட்ட திருத்த மசோதா இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.  

–இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது. 

இதனிடையே இந்த புதிய மின்சார சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 10) ஆர்ப்பாட்டம் நடத்த மின்வாரிய தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், மசோதா தாக்கல் செய்யப்படும் நாளன்று அதாவது இன்று, மின்வாரிய பணியாளர்கள் உடனடியாக வேலை நிறுத்தம் செய்வார்கள் என மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு அறிவித்துள்ளது குறிப்பிடத் தக்கது.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com