நான் ஒருவேளை மர்மமான முறையில் இறந்தாலும்கூட, உங்களை அறிந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று எலான் மஸ்க் தன் டிவிட்டரில் பதிவிட்டிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியும், உலக பெரும் பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க், கடந்த ஏப்ரல் 25-ம் தேதி டிவிட்டர் நிறுவனத்தை 3.36 லட்சம் கோடிக்கு (44 பில்லியன் டாலர்) விலைகொடுத்து வாங்கினார்.
இந்நிலையில் எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் அனைவரையும் அதிர்ச்சி அடையும் வகையில் பதிவிட்டதாவது:
நான் மர்மமான நிலையில் இறந்தாலும்கூட, உங்களை எல்லாம் அறிந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு பதிவிட்டுள்ளார். இப்படியொரு விஷயத்தைப் பதிவிடுவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு, எலான் மஸ்க் கூறியதாவது:
உக்ரைனில் உள்ள பாசிசப் படைகளுக்கு ராணுவத் தகவல் தொடர்பு சாதனங்களை வழங்குவதில் தனது ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சேவை ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதன்மூலம் ரஷியா–உக்ரைன் போர் விவகாரத்தில் எலான் மஸ்க்குக்கு ரஷ்யாவிடமிருந்து அச்சுறுத்தால் ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தை இந்த இரண்டு பதிவுகளும் தூண்டியுள்ளன.