நைஜீரியாவில் இருந்து வந்த விமானம்; இலங்கை அதிபர் வெளிநாடு தப்ப திட்டம்?

நைஜீரியாவில் இருந்து வந்த விமானம்; இலங்கை அதிபர் வெளிநாடு தப்ப திட்டம்?
Published on

இலங்கையில் பொருளாதார நெருக்கடிகளால் ஏற்பட்டுள்ள  மக்கள் போராட்டத்திற்கு அடிபணிந்து பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே நேற்று ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, இலங்கைப்  பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் இல்லததை பொதுமக்கள் நேற்றிரவு தீ வைத்து கொளுத்தினர். இந்த நிலையில், மஹிந்த ராஜபக்சே கொழும்பில் உள்ள பிரதமர் இல்லமான அலரி மாளிகையிலிருந்து பலத்த ராணுவ பாதுகாப்புடன் வெளியேறினார்.

முன்னதாக நைஜீரியா நாட்டிலிருந்து சிறப்பு விமானம் ஒன்று இலங்கையில் உள்ள கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அதிகாலையில் தரையிறங்கியுள்ளது. இந்த விமானம் மூலமாக ராஜபக்சே வெளிநாடு தப்பிச்செல்ல திட்டமிட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மருத்துவ காரணங்களை கூறி அவர் தப்பிச்செல்ல திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 

முன்னதாக, இலங்கையில் ஏற்பட்ட வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் அந்த நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால், அந்நாட்டு மக்கள், ராஜபக்சே அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், நேற்று. மக்களின் போராட்டம் வன்முறையாக வெடித்ததா, மஹிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

மக்களின் போராட்டத்தை எதிர்த்த ஆளுங்கட்சி எம்.பி.யான அமரகீர்த்தி அத்துகொரலா மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதனால், ஆத்திரமடைந்த மக்கள் அவரை துரத்திச் சென்றனர். அப்போது, போராட்டக்காரர்களுக்கு பயந்த எம்.பி. அமரகீர்த்தி தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அமைச்சர், அரசியல் தலைவர்கள் உள்பட 35 பேரின் இல்லங்களுக்கு தீ வைத்து எரித்தனர்

தற்போது இலங்கை அரசுக்கு எதிராக கல்வி, மருத்துவம், போக்குவரத்து, தபால் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த 1000 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com