புலிட்சர் விருதுகள் அறிவிப்பு: 4 இந்தியர்களுக்கு விருது!

புலிட்சர் விருதுகள் அறிவிப்பு: 4 இந்தியர்களுக்கு விருது!
Published on

சர்வதேச அளவில் இலக்கியம், போட்டோ ஜர்னலிசம், நாடகம், இசைத்துறை போன்ற துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் புலிட்சர் விருது வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருது நேற்றிரவு அறிவிக்கப்பட்டது.

இந்தப் பட்டியலில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் இந்தியாவைச் சேர்ந்த புகைப்படக்காரர்களான அட்னன் அபிதி, காஷ்மீர் பெண் புகைப்படக்காரரான சன்னா இர்ஷாத் மாட்டூ, மற்றும் அமித் தேவ், ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட போட்டோ ஜர்னலிஸ்ட் டேனிஷ் சித்திக்கி ஆகிய 4 இந்தியர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகியோர்  இடம்பெற்றுள்ளனர். இதில் மறைந்த டேனிஷ் சித்திக்கி 2-ம் முறையாக புலிட்சர் பரிசு வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

யார் இந்த டேனிஷ் சித்திக்கி.. 1983-ல் புதுடெல்லியில் பிறந்த டேனிஷ், இளமையும் ஆற்றலும் உச்சமாகத் திகழும் பருவத்தில் – 38 வயதில்இறந்தார். அமெரிக்காவில் செப்டம்பர் 11-ல் நடத்தப்பட்ட இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, ஒட்டுமொத்தமாக மாறிய உலகத்துக்குள் நுழைந்த ஒரு தலைமுறை இளைஞர்களின் பிரதிநிதி அவர்.

ஜனநாயகரீதியான கருத்துப் பரிமாற்றங்கள், போராட்டங்கள் தீவிரமாக ஒடுக்கப்படத் தொடங்கிய அதேவேளையில் மதரீதியான, இனரீதியான அடையாளங்கள் கூர்மையடைந்து பரஸ்பரம் மோதிக்கொண்ட முக்கியமான நிகழ்வுகளுக்கு அவர் எடுத்த புகைப்படங்கள் சாட்சியாக இருக்கின்றன.

ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் இந்திய பிரதிந்தியாக பணியாற்றிய டேனிஷ் சித்திக்கியின் பல செய்திப் புகைபடங்கள் பிரசித்தி பெற்றவை.  ரோஹிங்கியா அகதிகள், டெல்லியில் நடந்த கலவரம், புலம்பெயர் தொழிலாளர்கள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. ரோஹிங்கியா அகதிகள் குறித்த அவரது விடியோ மர்றும் புகைப்படங்கலுக்காகத்தான் முதல் தடவை டேனிஷூக்கு புலிட்சர் விருதைப் பெற்றுத் தந்தன

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் அவர் பணியிலிருந்தபோது தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார். இந்நிலையில், டேனிஷ் சித்திக்கியின் மறைவுக்குப் பின்னர் அவருக்கு புலிட்சர் விருது அறிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com