தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க அவசரச் சட்டத்தை உருவாக்கச் சிறப்புக் குழுவை அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு அறிக்கையில் தெரிவித்ததாவது:
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. சமீபத்தில் சென்னை மணலியை சேர்ந்த பவானி என்ற இளம் பெண் ஆன்லைன் சூதாட்டத்தில் 20 பவுன் நகை, 3 லட்சம் ரூபாய் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டார்.
இது போன்ற விபரீதங்கள் தொடராமல் இருக்க, ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்தை கொண்டு வருவது தொடர்பாக பரிந்துரைக்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் ஐ.ஐ.டி தொழில்நுட்ப வல்லூர் சங்கரராமன், மனவியல் மருத்துவர் வட்கமி விஜயகுமார், போலீஸ் அதிகாரி வினித் தேவ் வான்கடே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆன்லைன் ரம்மி தொடர்பாக இன்னும் இரு வாரங்களில் இந்த குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.
– இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.