மாணவர்களே.. எச்சரிக்கை! போலிகளை நம்பாதீர்கள்!

மாணவர்களே.. எச்சரிக்கை! போலிகளை நம்பாதீர்கள்!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இலவச கட்டணத்துடன் இடம் வாங்கித் தருவதாக கூறி, மாணவர்களுக்கு வரும் இமெயில்கள் போலியானது. அதை யாரும் நம்ப வேண்டாம் என அந்த பல்கலைக்கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
அண்ணா பல்கலைக் கழகத்தின் பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், முதல் செமஸ்டர் கட்டணத்துடன் ரூ.1 லட்சம் கட்டினால் இலவசமாக படிக்கலாம் என்று பல மாணவர்களுக்கு இமெயில் அனுப்பட்டுள்ளதாக புகார் வந்துள்ளது. அந்த இ- மெயில்கள் போலியானது.
இந்த இமெயில்கள் குறிப்பாக என்.ஆர்.ஐ மாணவர்களை குறிவைத்து அனுப்படுகிறது. மாணவர் சேர்க்கை தொடர்பான தகவல்களுக்கு www.annauniv.edu என்ற பல்கலைக்கழக இணையதளத்தை மட்டுமே அணுகவேண்டும். மாணவர்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.
– இவ்வாறு  தெரிவிக்கப்பட்டுள்ளது
logo
Kalki Online
kalkionline.com