பாகிஸ்தானில் பதற்றம்; இம்ரான் கான் பதவி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து போராட்டம்!

பாகிஸ்தானில் பதற்றம்; இம்ரான் கான் பதவி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து போராட்டம்!

பாகிஸ்தானில் பிரதமர் இம்ஈரான்கான் பதவிநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும்  மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்

பாகிஸ்தான் நாடளுமன்றத்தில் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக நடத்தப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப் பட்டது. நேற்று நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பில் பாகிஸ்தான் நாடாளுமன்ற மொத்த உறுப்பினர்கள் 342 பேரில் 174 உறுப்பினர்கள் இம்ரான் கானுக்கு எதிராக வாக்களித்தனர். இதையடுத்து நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால் இம்ரான் கான் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

இதையடுத்து இன்று  பாகிஸ்தானில் பெரும் பதற்றம் ஏற்ப்பட்டுள்ளது.

இந்த சூழலில் இம்ரானின்  பதவி நீக்கத்தை கண்டித்து அந்நாட்டில் இஸ்லாமாபாத் , கராச்சி , லாகூர், பெஷாவர் , மலகாண்ட் , முல்தான் கானேவால் , கைபர் , ஜாங் மற்றும் குவெட்டா உள்ளிட்ட பல நகரங்களிலும் போராட்டம் வெடித்தது.

இதுகுறித்து இம்ரான் கான் நாட்டு மக்களுக்கு முன்னதாக இம்ரான் கான் தெரிவித்ததாவது;

பாகிஸ்தானில் "ஆட்சி மாற்றத்திற்கான வெளிநாட்டு சதி" நடந்துள்ளது. எனவே, இந்த் சதிக்கு எதிராக நாட்டு  மக்கள் அனைவரும் அமைதியான முறையில் தெருக்களில் இறங்கி போராட வேண்டும்.

-இவ்வாறு இம்ரான் கான் அழைப்பு விடுத்திருந்தார். இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை தவிர்க்க ஆளுங்கட்சியான தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) அரசு  பல வழிகளில் முயற்சித்தும் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com