60 வருடங்களில் முதன்முறை: பிரிட்டன் ராணியின்றி தொடங்கியது நாடாளுமன்றம்!

60 வருடங்களில் முதன்முறை: பிரிட்டன் ராணியின்றி தொடங்கியது நாடாளுமன்றம்!

பிரிட்டனில் கடந்த 60 வருடங்களில் இதுவே முதன்முறையாக எலிசபெத் ராணி கலந்து கொள்ளாமல், அந்நாட்டு நாடாளுமன்றக் கூட்டம் தொடங்கியது.

பிரிட்டன் நாட்டின் நாடாளுமன்ற கூட்டம் இன்று தொடங்கிய நிலையில், 60 வருடங்களில் முதல் முறையாக தொடக்க விழா உரையை இங்கிலாந்து ராணி எலிசபெத் நிகழ்த்தவில்லை. 96 வயதான ராணி மூப்பு காரணமாக இந்த நிகழ்வில் கலந்து கொள்ளாததையடுத்து, தொடக்க விழா உரையை இளவரசர் சார்லஸ் நிகழ்த்தினார். 

இதுகுறித்து பிரிட்டன் நாடாளுமன்றச் செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது:

பிரிட்டன் ராணி எலிசபெத் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் ராணி எலிசபெத் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தது முதல், பொதுநிகழ்வில் கலந்து கொள்வதில்லை. அவர் தனது 70 ஆண்டுகால பொதுவாழ்வில், இரண்டு முறை மட்டுமே இந்த நிகழ்வில் பங்கேற்றதில்லை. மற்றபடி ஆண்டுதோறும் இந்த விழாவில் கலந்துகொள்ள ராணி சராட் வண்டியில் வரும்போது பாதுகாவலர்கள் அணிவகுப்பு மரியாதை செலுத்துவதை காண பொதுமக்கள் திரள்வார்கள்.

நாடாளுமன்றத்தில் தனது அரியணையில் ரானி அமர்ந்து அரசின் அந்த ஆண்டுக்கான திட்டங்களை வாசிப்பார். இந்த ஆண்டு ராணி கலந்து கொள்ளாததால், அவரது கிரீடம் அரியணையை அலங்கரித்தது. ராணியின் உரையை இளவரசர் சார்லஸ் வாசித்து, ''இந்த ஒவ்வொரு மசோதாவையும், ராணியின் இந்த அரசு மேற்கொள்ளும்'' என கூறினார்.

-இவ்வாறு தெரிவித்தனர்.

இந்த ஆண்டு ராணியின் பிறந்தநாளும், அவர் அரியணையில் ஏறிய 70-வது ஆண்டும் சேர்ந்து வருவதால், பக்கிங்காம் அரண்மனையில் கோலாகலமாகக் கொண்டாட திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com