IPL கிரிக்கெட் போட்டி: ப்ளே ஆப் சுற்றுக்கு குஜராத் அணி தகுதி!

IPL கிரிக்கெட் போட்டி: ப்ளே ஆப் சுற்றுக்கு குஜராத் அணி தகுதி!
Published on

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணி, இந்த தொடரின் முதல் அணியாக, ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

புனேவில் நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர் விருத்திமான் சகா 5 ரன்களிலும், அடுத்து வந்த மேத்யூ வேட் 10 ரன்களிலும், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஆனால் தொடக்க வீரரான ஷுப்மன் கில் நிதானமாக விளையாடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் எடுத்தார். இந்நிலையில் குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது.  

அடுத்து வந்த  லக்னோ அணி, குஜராத் அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் திணறியது. தீபக் ஹூடா மட்டுமே அதிகபட்சமாக 27 ரன்கள் சேர்த்த நிலையில், மற்ற வீரர்கள் உடனுக்குடன் அவுட் ஆயினர். இந்நிலையில் லக்னோ அணி 13.5 ஓவர்களில் 82 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதையடுத்து 62 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற குஜராத் அனி, இந்த தொடரில் 9-வது வெற்றியை தட்டிச் சென்றது.

இந்நிலையில் 18 புள்ளிகள் எடுத்த குஜராத் டைட்டன்ஸ் அணி, இந்த சீசன் ஐ.பி.எல் தொடரின் முதல் அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com