விம்பிள்டன் பட்டம் வென்றார் ஜோக் கோவிச்!

விம்பிள்டன் பட்டம் வென்றார் ஜோக் கோவிச்!

விம்பிள்டன் க்ராண்ட் ஸ்லாம் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடந்திருந்தது. இதில் செர்பிய வீரரான ஜோக்கோவிச் வென்று, தொடர்ந்து 4 – வது முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டம் தட்டிச் சென்றார். மேலும் ஜோக்கோவிச் இதுவரை 21க்ராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றுள்ளார்.

இந்த விம்பிள்டன் தொடரின் இறுதிப் போட்டியில் ஜோக்கோவிச் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரியோஸூடன் மோதினார். கிரியோஸுக்கு இதுவே  முதல் க்ராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. 

 ஜோக்கோவிச் அரையிறுதியில் நாரியை வென்று இறுதிப்போட்டிக்கு வந்திருந்தார். கிரியோஸ் அரையிறுதியை ஆடவே இல்லை. நடால் காயம் காரணமாக விலகியதால் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தேர்வானார். 

ஏறக்குறைய 3 மணி நேரத்திற்கும் மேல் நடந்த இந்த போட்டியில் 4-6, 6-3, 6-4, 7-6(3) என்ற செட் கணக்கில் ஜோக்கோவிச் வென்றார். முதல் செட்டின் முதல் கேமை ஜோக்கோவிச் வென்றார். பின்னர் இருவருமே மாறி மாறி கேம்களை வென்றனர். 

விறுவிறுப்பான இந்த இறுதிப் போட்டி டை ப்ரேக்கருக்கு இட்டுச் சென்றது. டை பிரேக்கரில் ஜோக்கோவிச். 7-3 என வென்று விம்பிள்டன்  க்ராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றினார்.

மேலும் ஜோக்கோவிச்  தனது  21 வது க்ராண்ட் ஸ்லாமை வென்ற வகையில் தரவரிசைப் பட்டியலில் அவர் 2-ம் இடத்திற்கு முன்னேறியிருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com