12-ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு: அரசு அறிவிப்பு!

12-ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு: அரசு அறிவிப்பு!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக பள்ளிக் கலிவித்துறை இயக்ககம் வெளியிட்டுள்ல அறிக்கை:

தமிழகத்தில் நடந்து முடிந்த 12-ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள், மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் நாளை காலை 11 மணிக்கு வெளியிடப்படும். மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின் பட்டியலும் நாளை வெளியாகிறது. அதன்படி, www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் நாளை காலை 11 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. பட்டியலில் இடம்பெறாத தேர்வர்களின் விடைத்தாள்களில் மதிப்பெண் மாற்றம் இல்லை என்று தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள், தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை உடனே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

–இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com