இந்தியாவில் போயிங், ஏர்பஸ் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் விமானங்கள் மூலமாகத்தான் பயணிகள் விமான சேவை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தியாவிலேயே. இந்துஸ்தான் ஏரோநேடிக்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள 17 இருக்கைகளுடன் கூடிய சிறிய ரக சுதேசி விமானம் இன்றுமுதல் உள்நாட்டில் பயணிகளுக்கான சேவையை தொடங்கியுள்ளது.
இந்த விமானத்தின் சேவையை விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர் அசாமின் திப்ரூகர் மற்றும் அருணாச்சலப்பிரதேசத்தின் பசிகட் அகிய நகரங்களுக்கு இடையே இந்த விமானத்தின் முதல் சேவை இன்று தொடங்கப் பட்டது.
இதுகுறித்து விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியதாவது:
இந்தியாவிலேயே சுதேசியாக இந்துஸ்தான் ஏரோநேடிக்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த டோர்னியர் ரக விமானங்களை ஏற்கனவே பாதுகாப்புப் படையினர் பயன்படுத்தி வருகின்ற்னர். இப்போது முதன்முறையாக இந்தவகை விமானம், பயணிகள் சேவைக்காக தொடங்கியுள்ளது.
-இவ்வாறு அவர் கூறினார்.
அசாம் மற்றும் அருணாசல பிரதேச மாநிலங்களுக்கு இடையே அல்லையன்ஸ் ஏர் நிறுவனம் இந்த விமானத்தை ஏப்ரல் 18 -ம் தேதி முதல் தினசரி சேவையாக இயக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.