Nothing phone 1: புது மாடல் செல்போன் அறிமுகம்!

Nothing phone 1: புது மாடல் செல்போன் அறிமுகம்!
Published on

ஸ்மார்ட் போன் தயாரிப்பில் சிறப்புமிக்க ஒன்-பிளஸ் நிறுவனம் தன் லேட்டஸ்ட் தயாரிப்பான நத்திங் ஃபோன் 1 என்ற மாடல் செல்போன்களை நேற்றிரவு அறிமுகப் படுத்தியுள்ளது. 

-இதுகுறித்து அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் கார்ல் பெய் தெரிவித்ததாவது:

நத்திங் ஃபோன் 1 ரக லேட்லஸ்ட் ஸ்மார்ட்போன் லண்டனில் காணொலிக் காட்சி மூலம் நேற்றிரவு (ஜூலை 12) வெளியிடப்பட்டது. அவை ஒன்-பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சேனல்கள் வழியாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த நத்திங் ஃபோன் 1 ரகங்கள் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை கொண்டதாக இருக்கும். மேலும், ஆண்ட்ராய்டு அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் மூலம் இந்த போன் இயங்கும்.

-இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

இந்த புது வகை  ஸ்மார்ட் போன் வெளியீட்டு விழா, 'ரிட்டர்ன் டு இன்ஸ்டிங்க்ட்' எனப்படும் மெய்நிகர் நிகழ்வாக நேற்றிரவு  8.30 மணிக்கு இந்திய நேரப்படி தொடங்கி அதன் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் வழியாக நேரலையில் ஒளிபரப்பப்படது. மேலும், நத்திங் என்கிற இணையதளத்தில் இதுபற்றிய விபரங்களை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. 

இந்தியாவில் இந்த போன் பிளிப்கார்ட் தளம் வழியாக விற்பனைக்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com