சுற்றுலாத் தலமானது இலங்கை அதிபர் மாளிகை!

சுற்றுலாத் தலமானது இலங்கை அதிபர் மாளிகை!
Published on

இலங்கையில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில்  கடந்த 9-ஆம் தேதி அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்தனர். இந்நிலையில் அதிபர் மாளிகையிலிருந்து தப்பிச் சென்ற அதிபர் கோத்தபய ராஜபக்சே தன் பதவியை ராஜினாமா செய்ததுடன் அந்நாட்டுக் கடற்படை படை தளத்தில்  தஞ்சமடைந்ததாகச் சொல்லப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலையில் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவுக்கு தப்பிச் சென்றதாக அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே, போராட்டக்காரர்கள் கடந்த 9-ஆம் தேதி அதிபர் மாளிகையை உடைத்து உள்ளேச் சென்று அதைக் கைப்பற்றினர். அம்மாளிகையில் கோடிக்கணக்கான ரூபாய் கட்டுக்கட்டாக இருந்ததைக் கண்டு, அவற்றை ராணுவத்திடம் ஒப்படைத்தனர்.

நாடெங்கும் மின்சார வெட்டு தலைவிரித்தாடிய சமயத்தில் அதிபர் மாளிகையில் ஏராளமான ஏர் கண்டிஷனர்கள் இயங்கி கொண்டிருந்தது கண்டு போராட்டக்காரர்கள் கொதித்துப் போயினர்.க்கள் ஒரு வேளை உணவுக்கு கூட சிரமப்பட்டு போராடிக் கொண்டிருக்கும்போது, அதிபர் மக்கள் வரிப்பணத்தில் இப்படி ஆடம்பர வாழ்க்கை நடத்தி வந்தது கண்டு அதிர்ந்தனர். 

இந்நிலையில் இப்போது இலங்கை அதிபர் மாளிகை சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது. போராட்டக்காரர்கள் ஒருபக்கம் அதிபர் மாளிகையில் நீச்சல் குளத்தில் குளித்தும், மெத்தையிலும் குதியாட்டம் போட்டும்,  ஜிம்மில் உடற்பயிற்சி செய்தும் பொழுதை கழித்து வருகின்றனர். இன்னொருபுறம் அதிபர் மாளிகை சுற்றிப் பார்க்க வெகுதூரத்திலுள்ள ஊர்களிலிருந்து  மக்கள் படையெடுத்து வருகிறார்கள்.

மாளிகைக்குள் நுழைவதற்கு மிக நீண்ட வரிசை காணப்படுகிறது. தாங்கள் வீட்டிலிருந்து கொன்டு வந்த கட்டுசோற்றை அதிபர் மாளிகையின் புல்வெளியில் அமர்ந்து உற்சாகமாக உண்கின்றனர். மற்றொருபுறம் போராட்டக்காரர்கள் திறந்தவெளியில் சமையல் செய்து பரிமாறும் காட்சிகளும் சகஜமாக உள்ளது. சுற்றுலா வரும் மக்கள், அதிபர் மாளிகையின் இருக்கைகளில் அமர்ந்தும் புல்வெளிகளில் நின்றும் செல்பி எடுக்கத் தவறுவதில்லை.  

இலங்கையில் பொருளாதார நெருக்கடிகளும், போராட்டங்களும் தொடர்ந்தாலும் அதிபர் மாளிகையை பார்த்துச் சென்ற பெருமிதம் அவர்களிடம் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com