இந்திய ராணுவத்தின் செலவுகளை குறைக்கும் வகையில் முப்படைகளிலும் 4 ஆண்டுகள் மட்டுமே பணி வழங்கும் புதிய திட்டத்தை ஒன்றிய அரசு இன்று அறிமுகம் செய்தது.
மத்திய அரசின் பட்ஜெட்டில் பெருமளவு நிதி ஒதுக்கீடு ராணுவத்துக்கு செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக ராணுவத்தில் ஆட்சேர்ப்பு பணிகள் நிறுத்தப் பட்டன. எனவே ராணுவத்தின் முப்படை 1.25 லட்சத்திற்கும் அதிகமான இடங்கள் காலியாக உள்ளன. இந்த நிலையில், அக்னிபாத் என்ற புதிய ராணுவ ஆளெடுப்பு திட்டத்தை முப்படைகளின் தளபதிகள் இன்று வெளியிடுகின்றனர்.
-இதுகுறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சார்பாக வெளியான தகவல்;
மத்திய அரசின் புதிய அக்னிபாத் திட்டத்தின்படி, இனி ரானூவத்தில் புதிதாக சேர்பவர்களுக்கு முப்படைகளிலும் 4 ஆண்டுகள் மட்டுமே பணி வழங்கப்படும். 4 ஆண்டுகள் முடிவில் 80% பேர் பணியிலிருந்து விடுவிக்கப்படுவர். மீதமுள்ள 20% பேர் அவர்களின் திறமைக்கேற்ப பணிநீட்டிப்பு கிடைக்கப் பெறுவர்.
இந்த புதிய அக்னிபாத் திட்டத்தின் மூலம் ராணுவத்திற்கான செலவு பல ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்கப்படும். என எதிர்பார்க்கப் படுகிறது. சுமார் 8 நாடுகளில் இதுபோன்று செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்து பாதுகாப்பு அமைச்சகம் இந்த முடிவை எடுத்துள்ளது. பாதுகாப்புப் படைகளின் செலவினம் மற்றும் வயது விவரங்களை குறைப்பதற்கான பிரதமர் நரேந்திர மோடியின் முக்கிய சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டம் உள்ளது.
–இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.