நடிகர் நெப்போலியன் அமெரிக்காவில் என்ன செய்கிறார்?

நடிகர் நெப்போலியன் அமெரிக்காவில் என்ன செய்கிறார்?

அமெரிக்காவில் செட்டிலாகியுள்ள நடிகர் நெப்போலியன் அங்கு விவசாயம் பார்க்கும் காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் மூத்த நடிகரான நெப்போலியன். 90-களில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர்.இயக்குனர் பாரதிராஜாவின் 'புதுநெல்லு புது நாத்து' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகரான அறிமுகம் ஆனார். தொடர்ந்து அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த படங்களில் நடித்து ஆக்க்ஷன் ஹீரோ என்ற பெயர் பெற்றார். சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'எஜமான்' உள்ளிட்ட படங்களில் வில்லனாகவும் நடித்து பெயர் பெற்றார் நெப்போலியன். பின்னர் அரசியலில் நுழைந்து திமுகவில் எம்பி, மற்றும் மத்திய சமூக நலத்துறை இணை அமைச்சர் பதவிகளிலும் இருந்துள்ளார்.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டிலான நெப்போலியன், அங்கு டென்னசி மாகாணத்தில் நேஷ்வில்லே நகரில் தன் மனைவி மற்றும் 2 மகன்களுடன் வசித்து வருகிறார். மேலும் அங்கு அவர் விவசாயம் செய்து வருவதாக தெரிவித்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com