நடுவானில் தீப்பிடித்து எரிந்த செல்போன்: விமானப் பயணிகள் அச்சம்!  

நடுவானில் தீப்பிடித்து எரிந்த செல்போன்: விமானப் பயணிகள் அச்சம்!  
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

அசாம் மாநிலத்தில் உள்ள திப்ருகார் நகரிலிருந்து டெல்லிக்கு இன்று காலையில் இண்டிகோ விமானம் 150-க்கு மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அச்சமயம் விமானம் நடுவானில் பறந்துகொண்டு இருக்கும் போது, பயணி ஒருவரின் செல்போன் திடீரென்று கரும்புகையுடன் தீப்பற்றி எரியத் தொடங்கியது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் கூச்சலிட, விமானத்தில் இருந்த பணியாளர்கள் துரிதமாக செயல்பட்டு அநத் செல்போன் தீயை அணைத்தனர். இச்சமபவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. பின்னர் அந்த விமானம் டெல்லியில் தரையிறங்கியது என மூத்த விமான கண்காணிப்பு நிலைய அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com