டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா: தொடங்கியதா 4-வது அலை?

டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா: தொடங்கியதா 4-வது அலை?

Published on

டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த 40 நாட்களில் இல்லாத அளவில் அதிகரித்து வருவதால், பதற்றம் ஏற்பட்டுள்ளது. கொரோனா 4-வது அலை தொடங்கியதற்கான அறிகுறியா என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில், நேற்று ஒரே நாளில் 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 40 நாட்களில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச எண்ணிக்கை இது. மேலும் டெல்லியில் கடந்த  ஒரு வாரத்தில், கொரோனா பாசிட்டிவ் விகிதம் 0.5 சதவீதத்தில் இருந்து 2.39 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா 4-வது அலை தொடங்கி விட்டதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்தர் ஜெயின் கூறியதாவது:

டெல்லியில் அதிகரித்துள்ள கொரோனா பரவலை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. இதுவரை கொரோனா எக்ஸ்.இ. வகை புதிய மாறுபாடு கண்டறியபடவில்லை. அதனால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை. ஆனால் முக கவசம் அணிவது, தனி மனித இடைவெளி கடைபிடிப்பது உள்ளிட்ட விதிமுறைகளி பொது இடங்களீல் மக்கள் கடைபிடிக்க வேண்டியது அவசியம்.

-இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com