இன்று புனித வெள்ளி தினம்:  ராமேஸ்வரத்தில் சிலுவைப் பாதை நிகழ்வு!

இன்று புனித வெள்ளி தினம்:  ராமேஸ்வரத்தில் சிலுவைப் பாதை நிகழ்வு!
Published on

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட சம்பவத்தை நினைவு கூரும் வகையில் இன்று உலகம் முழுவதும்  புனித வெள்ளி தினம் கடைபிடிக்கப் படுகிறது. இதையொட்டி தமிழகத்திலும் அனைத்து தேவாலயங்களிலும் சிறப்புப் பிரார்த்தனைகள் நடக்கிறது.

இயேசு கிறிஸ்து கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளி தினமாகவும், அவர் 2 நாட்களுக்குப் பின் மீண்டும் உயிர்த்தெழுந்த நாள் ஈஸ்டர் பண்டிகையாகவும் கொண்டாட்டப் படுகிறது. அந்த வகையில் இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைவதற்காக கொண்டு செல்லப்பட்ட நிகழ்வு, இன்று நடத்தப்பட்டது.

புனித வெல்ளி தினத்தையொட்டி, ராமேஸ்வரம் அடுத்த ஓலைக்குடா பகுதியில் ஆண்டுதோறும் சிலுவைப் பாதை நிகழ்வு நடைபெறுவது வழக்கம். அதேபோல் இன்று ராமேஸ்வரம் கடற்கரை பகுதியிலிருந்து இயேசுபிரான் மற்றும் யூதர்கள் போன்று வேடமணிந்தவர்கள் சிலுவையை சுமந்து சென்றனர். பின்னர் ஓலைகுடாவில் உள்ள தேவாலயத்தில் சிலுவைப் பாதை சென்றடைந்த பின்னர் சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது.

இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் மீனவ கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com