முதல்வரை தள்ளிய பாதுகாப்பு அதிகாரி: உடனடி இடமாற்றம்!

முதல்வரை தள்ளிய பாதுகாப்பு அதிகாரி: உடனடி இடமாற்றம்!
Published on

புதுச்சேரி வில்லியனூரில் திருக்காமேஸ்வரர் கோவில் தேரோட்டத்தின் போது, முதல்வர் ரங்கசாமியை தள்ளிவிட்ட போலீஸ் அதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

புதுச்சேரியில் கடந்த 11-ம் தேதி திருக்காமேஸ்வரர் கோவில் தேரோட்டத்தில் அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்துக்கு வழி ஏற்படுத்துவதற்காக அவரின் பாதுகாப்பு அதிகாரி ராஜசேகர் என்பவர்  முதல்வர் ரங்கசாமியை இடது கையால் தள்ளி விட்டார். இதனால் நிலை தடுமாறி பின்னோக்கி சென்ற முதல்வர் ரங்கசாமி பின்னர் சுதாரித்துக் கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதையடுத்து உதவி ஆய்வாளர் ராஜசேகரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து அம்மாநில காவல்துறை உத்தரவிட்டுள்ளது. . 

-இதுகுறித்து துணைநிலை ஆளுநர் செயலகம்  தெரிவித்ததாவது:

கடந்த 11-ம் தேதி  வில்லியனூரில் நடைபெற்ற திருக்காமேஸ்வரர் கோயில் தேர் திருவிழாவின் போது, ஒரு முக்கிய பிரமுகரின் பாதுகாப்பு அதிகாரி கவனக் குறைவாக செயல்பட்டதாக துணைநிலை ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதையடுத்து இச்சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை செய்து விளக்கம் அளிக்குமாறு காவல்துறை இயக்குநருக்கு துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டார். இந்நிலையில் அந்த உதவி ஆய்வாளர் ராஜசேகர் மீது விசாரணை நடத்தி, அவரை புதுச்சேரி ஆயதப் படைக்கு இடமாற்றம் செய்து காவல்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

-இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com