வாட்ஸப் வதந்தி: அரசியல் ஆலோசகர் படுகொலை!

வாட்ஸப் வதந்தி: அரசியல் ஆலோசகர் படுகொலை!
Published on

மெக்சிகோவில் ஒரு இளம் அரசியல் ஆலோசகர் ஒருவரை வாட்ஸப்பில் குழந்தை கடத்தல்காரர் என வதந்திகல் பரவ, அதை உண்மை என்று நம்பி அவரை உயிரோடு எரித்து கொன்ற சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-இச்சம்பவம் குறித்து சிபிசி நியூஸ் நிறுவனம் வெளியிட்ட செய்தியில் தெரிவித்ததாவது:

மெக்சிகோவில் 31 வயதான டேனியல் பிகாசோ என்ற இளம் அரசியல் ஆலோசகரை குழந்தை கடத்தல்காரர் என தவறாக சித்தரித்து பல வாட்ஸ் அப் குழுக்களில் தகவல் அனுப்பப் பட்டிருக்கிறது. இதை உண்மை என எண்ணி 200-க்கும் மேற்பட்ட உள்ளூர் மக்கள் ஒன்றுகூடி டேனியலை சரமாரியாக தாக்கினர்.

இத்தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், டேனியல் பிகாசோவை ரோந்து காரில் ஏற்ற முயன்றனர். ஆனால் போலீசாரின் பாதுகாப்பை மீறி டேனியலை காரிலிருந்து இழுத்து தாக்கியதுடன்,  அங்கிருந்த விளையாட்டு மைதானத்துக்கு கொண்டு சென்று டேனியல் பிகாசோவை உயிருடன் தீ வைத்து கொன்றனர். 

-இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது..

டேனியல் பிகாசோ, கடந்த மார்ச் 2022 வரை அந்நாட்டு லெஜிஸ்லேட்டிவ் சேம்பர் ஆஃப் டெபுடி-யில் அரசியல் ஆலோசகராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com