சென்சுரி அடிக்கிறார் பிரதமர் மோடியின் அன்னை!

சென்சுரி அடிக்கிறார் பிரதமர் மோடியின் அன்னை!

Published on

பிரதமர் மோடியின் தாய் ஹீரா பென்னுக்கு நாளை மறுதினம் (ஜூன் 18)  99 வயது முடிந்து 100-வது வயது பிறக்கிறது. இதையொட்டி குஜராத்தில் சிறப்பு விழா ஏற்பாடுகள் பிஜேபி கட்சித் தொண்டர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பிரதமர் நரேந்திர மோடியின் தாய் ஹீராபென், குஜராத் மாநிலம். அகமதாபாத்திலுள்ள காந்திநகரில் வசிக்கிறார். கடந்த 1923ம் வருடம் ஜூன் 18ம் தேதி பிறந்த ஹீரா பென்னுக்கு, நாளை மறுதினம் 99 வயது முடிந்து 100 வயது பிறக்கிறது.

இதையடுத்து, குஜராத்துக்கு நாளை மறுதினம் செல்லும் பிரதமர் மோடி, தாயை சந்தித்து ஆசி பெற இருப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும், பிரதமர் மோடியின் சகோதரர்கள், தங்கள் தாயின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு, அகமதாபாதில் உள்ள ஜகன்நாதர் கோவிலில் சிறப்பு அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதிலும், பிரதமர் மோடி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com