TANCET 2022 நுழைவுத் தேர்வு; மதிப்பெண் பட்டியல் வெளியீடு!

TANCET 2022 நுழைவுத் தேர்வு; மதிப்பெண் பட்டியல் வெளியீடு!
Published on

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் TANCET 2022 நுழைவுத் தேர்வுக்கான மதிப்பெண் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த மதிப்பெண் பட்டியலை அண்ணா பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான‌ tancet.annauniv.edu என்ற இணையதளத்தில் பார்க்கலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

-இதுகுறித்து சென்னை அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்ததாவது:

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் TANCET 2022 நுழைவுத் தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. அதனை அதைகாரபூர்வ இணையதளத்தில் சென்று பார்த்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் அட்மிட் கார்டை பயன்படுத்தி தேர்வு மதிப்பெண்ணைப் பார்த்துக் கொள்ளலாம்.

இதற்கு ஜூன் 30-ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மதிப்பெண் அட்டையில் வேட்பாளரின் தனிப்பட்ட பெயர், ரோல் எண், TANCET 2022 தேர்வு முடிவுகள் போன்றவைகள் இருக்கும். இந்த மதிப்பெண் பட்டியலை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அதற்கு  TANCET-ன் அதிகாரபூர்வ இணையதள பக்கத்திற்குள் சென்று, ரிசல்ட் மற்றும் ஸ்கோர் கார்டு ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். அதில் உங்களுடைய உள்நுழைவு தகவலை பதிவிட்டவுடன், மதிப்பெண் பட்டியல் திரையில் தெரியும்.

இந்த மதிப்பெண் பட்டியலின் விவரங்களை சரிபார்த்த பிறகு TANCET 2022 மதிப்பெண் பட்டியலை சேவ் செய்து வைக்க வேண்டும். இந்நிலையில் புகைப்படம் , கையெழுத்து போன்ற பிரச்சனைகளால் விண்ணப்பதாரர்களின் TANCET தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியிடப் படாமல் இருந்தால், அதற்கான திருத்தங்களை  tancetau.@gmail.com என்ற இணையதள பக்கத்தில் ஆதார் அட்டை எண் மற்றும் விண்ணப்ப எண் போன்றவற்றை பயன்படுத்தி செய்து கொள்ளலாம்

இந்த திருத்தங்களை ஜூன் 30-ஆம் தேதிக்குள் செய்யவில்லை என்றால் தேர்வுக்கான திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. மேலும் TANCET மதிப்பெண் பட்டியலின் செயல்முறை முடிவடைந்ததும் கவுன்சிலிங் நடத்தப்படும். இதற்கு செல்பவர்கள் மதிப்பெண் பட்டியலுடன் உரிய கல்வி ஆவணங்களைக் கொண்டு செல்ல வேண்டும்.

இவ்வாறு அண்ணா பலக்லைக் கழகம் தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com