எதிரும் புதிருமாக ஓடும் ரயில்கள்: தந்தை, மகன் செல்ஃபி!

எதிரும் புதிருமாக ஓடும் ரயில்கள்: தந்தை, மகன் செல்ஃபி!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

இரண்டு ரயில்கள் ஒரே நேரத்தில் எதிரும் புதிருமாக கடக்கும்போது, ஒரு ரயிலில் ரயில்வே கார்டாகப் பணியாற்றும் தந்தையும் மற்றொரு ரயிலில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றும் அவரது மகனும் எட்டிப் பார்த்து செல்ஃபி எடுத்து கொண்ட காட்சி இணையத்தைக் கலக்குகிறது.

ரயில்வே கார்டாக தந்தை ஒரு ரயிலில் பயணிக்க, எதிர் திசையில் வரும் மற்றொரு  ரயிலில்  டிக்கெட் பரிசோதகராக (TTE) அவரது மகன்  பணியாற்றுகிறார். இந்த இரண்டு ரயில்களும் அருகருகே கடக்கும்போது, ஓடும் ரயிலிலிருந்து மகன் எட்டிப் பார்த்து, எதிர்திசை ரயிலிலுள்ள தந்தையுடன் செல்ஃபி எடுத்துள்ளார். இந்த செல்ஃபி வைரலாகியுள்ளது. இந்த புகைப்படம் எங்கு எடுக்கப் பட்டது என்ற் விபரங்கள் தெரிவிக்கப் படவில்லை. ஆனால் அந்த ரயில்கள் வங்க தேசத்தில் எடுக்கப்பட்டதாக இருக்கும் என கருதப் படுகிறது. 

தந்தைமகன் அற்புதமான உறவை அழகான தருணத்துடன் இந்த புகைப்படம் வெளிப்படுத்துவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

logo
Kalki Online
kalkionline.com