கமலுக்கு சர்ப்ரைஸ்: கட்சி நிர்வாகி கொடுத்த சூப்பர் பரிசு! 

கமலுக்கு சர்ப்ரைஸ்: கட்சி நிர்வாகி கொடுத்த சூப்பர் பரிசு! 

Published on

மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் நடித்து சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் வெரும் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, அப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு விலையுயர்ந்த லெக்ஸஸ் காரை கமல் பரிசளித்தார்.  மேலும் அதில் நடித்த நடிகர் சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச், உதவி இயக்குனர்கள் 13 பேருக்கு அப்பாச்சி பைக் என பரிசளித்து மகிழ்ந்தார் கமல்ஜஹாசன். 

இந்நிலையில் கமல்ஹாசனுக்கு அவரே எதிர்பாராத வகையில் ஜெர்மனியிலிருந்து வரவழைக்கப்பட்ட விலையுயர்ந்த பேனா ஒன்றை சர்ப்ரைஸ் கிப்டாக பரிசரித்துள்ளார் மக்கள் நீதி மையத்தின் மாநில பிரச்சார அணிச் செயலாளரான  அனுஷா ரவி.

ஜெர்மன் நாட்டில் தயாரிக்கப்படும் நூற்றாண்டு பாரம்பரியமிக்க மோண்ட் பிளாங்க் (Mont Blanc) பேனாவை அந்நாட்டிலிருந்து வரவழைத்து கமலுக்குப் பரிசளித்துள்ளார் அனுஷா ரவி. இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:

உலகின் முக்கியப் பிரமுகர்கள் பலரும் மோன்ட் பிளாங்க் பேனாவைத்தான் பயன்படுத்துகின்றனர்.  ஜெர்மனியில் தயாரிக்கப்படும் நூற்றாண்டு பாரம்பரியமிக்க இந்த வகை பேனா கமலுக்குப் பிடித்தமானது என்பது தெரியும். அதனால்தான் அந்தப் பேனாவை வரவழைத்து பரிசாக கொடுத்தேன். விக்ரம் வெற்றியை போல் இன்னும் பல வெற்றிகள் அடைய நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும் எனக் கூறி அந்தப் பேனாவை அவர் பரிசளித்தேன்.

-இவ்வாறு அனுஷா ரவி தெரிவித்துள்ளார். கமலுக்குப் பரிசாகத் தரப்பட்ட இந்த நீல நிற மோண்ட் பிளாங்க் பேனாவின் மதிப்பு சுமார் ரூ.35,000 எனத் தெரிவிக்கப்படுகிறது. உலகெங்கும் மோண்ட் பிளாங்க் பேனா பெருமையின் சின்னமாகப் பார்க்கப் படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com