இன்று ஹோலி கொண்டாட்டம்; வண்ணப் பொடிகள் பூசத் தடை!

இன்று ஹோலி கொண்டாட்டம்; வண்ணப் பொடிகள் பூசத் தடை!

இன்று நாடு முழுவதும் ஹோலி பண்டிகை உற்சாகமுடன் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கர்நாடக மாநிலத்தில் வண்ணப் பொடிகளை விலங்குகள் மீது பூச தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஆண்கள், பெண்கள், சிறுவர் – என் வித்தியாசம் பாராமல் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை தூவியும், பூசியும் கொண்டாடுவது வழக்கம்.அந்த வகையில் இன்று நாடு முழுவதும் வண்ணமயமாக ஹோலி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப் படுகிறது. விலங்குகள்மீதும் வண்ணப் பொடிகளை தூவி கொண்டாடுவார்கள். இந்நிலையில் விலங்குகள் மீது வண்ணப்பொடி தூவ கர்நாடக அரசு தடை விதித்துள்ளது.

இதுகுறித்து கர்நாடகாவின் பெங்களூரு நகரில் உள்ள விலங்குகள் மற்றும் கால்நடை துறையின் துணை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஹோலியின்போது விலங்குகளின்மீது ரசாயன அல்லது இயற்கை வண்ணப் பொடிகள் தூவ தடை விதிக்கப் படுகிறது. காரணம்- விலங்குகளின் உடலில் இந்த வண்ணபொடிகள் அலர்ஜி ஏற்படுத்தக் கூடும். அதனால் விலங்குகளின் சுகாதாரத்திற்கு பெரிதும் பாதிப்பு ஏற்படுத்த கூடிய இதுபோன்ற வண்ணங்களை பூசாமல் தடுக்கும்படி பொதுமக்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன். தவிர, விலங்குகள் கொடுமை சட்டம் 1960-ன் படி இது சட்டவிரோதம் ஆகும்.

விலங்குகளின் மீது வண்ணப் பொடிகளை பூசுவது, தூவுவது போன்ற சம்பவங்கள் நடப்பது அறியப்பட்டால், இந்த சட்டத்தின் விதிகள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

-இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com