திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் நேற்றிரவு நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டு, சமீபத்தில் திறப்பு விழா நடைபெற்றது. இந்த பேருந்து நிலைய வளாகத்தினுள் 30-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. மேலும் இக்கடைகளில் வாடகை பிரச்சினை நிலவி வருவதால், முழுமையாக அனைத்துக் கடைகளும் திறக்கப்படவில்லை.
மேலும் இந்த வளாகத்தில் கடைகள் அதிகரித்திருப்பதால, 20 பேருந்துகள் மட்டுமே நிற்கும் அளவிற்கு பேருந்து நிலையம் அளவில் சுருங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு அங்கு மர்ம நபர் ஒருவர் நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து பாளையங்கோட்டை காவல்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:
பாளையங்கோட்டை பேருந்து நிலைய வளாகத்தில் நேற்று நள்ளிரவு நேரத்தில் பழ ஜூஸ் கடைக்கு அருகே நின்றிருந்த மர்ம நபர் ஒருவர் திடீரென நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டுத் தப்பியோடினார்.
அச்சமயம் மக்கள் நடமாட்டம் இல்லாததால் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. இதுகுறித்த தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். நாட்டு குண்டு வீசிய நபரைக் தீவிரமாக தேடி வருகிற்து. இதுகுறித்த விசாரணையின் முடிவில், அந்த நபர் நாட்டு வெடிகுண்டு வீசியற்கான காரணம் தெரிய வரும். சம்பவ இடத்தில் பொருத்தப் பட்டுள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் காவல்துறையினர் அந்த மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
-இவ்வாறு தெரிவித்தனர்.