1 கிலோ தக்காளி ரூ.100: சென்னை கோயம்பேடு நிலவரம்!

1 கிலோ தக்காளி ரூ.100: சென்னை கோயம்பேடு நிலவரம்!

தமிழகத்தில் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளியின் விலை 100 ரூபாயை தொட்டிருக்கிறது.

இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்ததாவது;

இம்மாதத் தொடக்கத்திலிருந்தே தக்காளி விலை அதிகரித்து வருகிறது. பொதுவாக இங்கு 80% தக்காளி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அசானி புயலைத் தொடர்ந்து தொடர்ச்சியாக மழை பொழிவின் காரணமாக ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரும் தக்காளியின் வரத்து கணிசமாக குறைந்துள்ளது.

அதனால் தொடர்ந்து  20-வது நாளாக தக்காளியின் விலை இன்று  அதிகரித்துள்ளது. முன்னதாக நேற்று கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ நாட்டு தக்காளி 90 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 10 ரூபாய் அதிகரித்து 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

-இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தக்காளி மட்டுமன்றி, மற்ற பல  காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. அந்தவகையில் நேற்று  1 கிலோ பீன்ஸ் ரூ.110 என்று இருந்த நிலையில் இன்று ரூ.120 என உயர்ந்துள்ளது. அதேபோல அவரைக்காயும் 1 கிலோ 80ரூ-வுக்கு நேற்று விற்கப்பட்ட நிலையில்  இன்று ரூ. 90 என்றாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com