இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி: நிர்மலா சீதாராமன் விளக்கம்!

இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி: நிர்மலா சீதாராமன் விளக்கம்!
Published on

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு படிப்படியாக வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைய என்ன காரணம் என்பதை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், இந்தக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரைப்போல இந்த தொடரிலும் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில் அவர் கூறியதாவது;

ரஷ்யாஉக்ரைன் போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உலக நிதி நிலைமைகள் இறுக்கம் போன்ற உலகளாவிய காரணிகள் தான் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் ஆகும். மேலும் பிரிட்டிஷ் பவுண்ட், ஜப்பானிய யென் மற்றும் யூரோ போன்ற நாணயங்கள்கூட  அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயை விட அதிகளவில் மதிப்பு சரிந்து பலவீனம் அடைந்துள்ளன. எனவே, இந்நாடுகளின் நாணயங்களுடன் ஒப்பிடுகையில் இந்திய ரூபாய் மதிப்பு வலிமையாகவே உள்ளது.

-இவ்வாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com